அரசியல்உள்நாடு

பொறாமைத்தன அரசியல் கலாச்சாரம் கைவிடப்பட வேண்டும் – சஜித்

நாட்டு மக்கள் இன்று இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த மக்களுக்கும் இந்த நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான பயணத்திற்கும் முழு பலமும் ஆதரவும் வழங்கப்பட வேண்டும். பொறாமைத்தன அரசியல் கலாச்சாரம் கைவிடப்பட வேண்டும்.

அதிக முயற்சியுடன் நாடு எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு நடைமுறை தீர்வுகளை வழங்கும் வேலைத்திட்டத்திற்கு பங்களிப்பும் தலைமைத்துவமும் வழங்கப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன் பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று அதனை மக்கள் வெற்றியாக மாற்றி, நாட்டுக்கு முன்னுரிமை வழங்கி, தேசிய நலனுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும்.

குறுகிய அரசியல் முரண்பாடுகளை தவிர்த்து தீர்வு காண வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

தெஹிவலை தேர்தல் தொகுதி கட்சி செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் இன்று தெஹிவலையில் இடம்பெற்றது.

இதில் ஐக்கிய மக்கள் சக்தியின் பிரேதச மட்ட கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பல்வேறு வாத விவாதங்களை நடத்த முடியுமாக இருந்தாலும் நாட்டின் சாதகமான பிரச்சினைகளைத் தீர்ப்பது கடினமான செயற்பாடாகும். தற்போது பொருளாதார வளர்ச்சி மந்தமாக உள்ளதால், மக்கள் கையில் பண புழக்கம் குறைவாக உள்ளது.

பணப் புழக்கம் தடைப்பட்டு பொருளாதார வளர்ச்சி குறைந்துள்ளது. இதனால் உற்பத்தியில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பொருளாதாரச் சுருக்கத்தை விடுத்து பொருளாதார விரிவாக்கல் இருக்க வேண்டும். பொருளாதார சுருக்கத்தால் முன்னேற்றத்தை காண முடியாது.

பாரம்பரியமான பழமைவாத அரசியலை கைவிட்டு புதிய வழியில் சிந்தித்து தாய்நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்.

ஒரு நாடாக எவ்வாறு மீள்வது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

மேலும், நாட்டின் தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோர் பாதுகாக்கப்பட வேண்டும். முதலீட்டை ஊக்குவிக்க வேண்டும். ஏற்றுமதி சார்ந்த பொருளாதார வளர்ச்சியை உருவாக்க வேண்டும்.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். மக்களின் பிரச்சினைகளுக்கான பதில்களை வழங்குவதே நாட்டுக்கான தீர்வாக அமைய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

தேர்தலில் பின்னடைவைக் கண்டு மந்தமடைவதை விடுத்து, நாட்டை எவ்வாறு மீளக் கட்டியெழுப்புவது என்பது குறித்து சிந்திக்க வேண்டும் என்று இங்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

Related posts

ஒரு மில்லியனை எட்டிய சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை!

ஒரே நாளில் 5,000 க்கும் மேற்பட்ட PCR பரிசோதனை

இதுவரை 426 கடற்படையினர் குணமடைந்தனர்