அரசியல்உள்நாடு

சிறுவர்களின் மனநிலையை வளப்படுத்துவதில் அதீத அக்கறைகொள்ள வேண்டும் – தலைவர் ரிஷாட்

கருணை, அன்பு, அரவணைப்பு என்பவற்றால் சிறுவர்களின் மனநிலையை பலப்படுத்த, அவர்களுக்கான எதிர்காலத்தில் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“சிறுவர் தினத்தை முன்னிட்டு அவர்களை வாழ்த்துவதில் நான் மகிழ்ச்சியடைகின்றேன்.

பாரிய சவால்களை எதிர்கொண்டே தங்களை கட்டமைக்க வேண்டிய நிர்ப்பந்தம், இன்றைய நவீன உலகில் சிறுவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தச் சவால்களை சாதகமாக ஆக்குவதற்கான வழிவகைகளை கண்டறிய வேண்டியது சமூகத்தலைவர்களின் பொறுப்பாக உள்ளது.

இந்தப் பொறுப்பில் நாம் கவனஞ்செலுத்தி களப்பணிகளில் ஈடுபடுகின்றோம். எல்லா சிறுவர்களினதும் எதிர்கால நம்பிக்கைகளுக்கு, எமது செயற்பாடுகள் பக்கபலமாக அமையும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

-ஊடகப்பிரிவு

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

SJBயில் தான் இணைந்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை :அர்ஜுன ரணதுங்க

மேல்மாகாணத்திலிருந்து வௌியேற முற்பட்ட 5 பேருக்கு கொவிட்