உள்நாடு

மறு அறிவித்தல் வரை சிரியா மற்றும் லெபனானுக்கு பயணிக்க வேண்டாம்

சிரியா மற்றும் லெபனான் ஆகிய நாடுகளுக்கு மறு அறிவித்தல் வரை பயணிக்க வேண்டாம் என இலங்கை பிரஜைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விசேட அறிப்பு ஒன்றை விடுத்து வௌிவிவகார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

குறித்த பிராந்தியங்களில் நிலவும் கொந்தளிப்பான நிலை காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தற்போது குறித்த நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் இது தொடர்பில் விழிப்புடன் இருக்குமாறும் பெய்ரூட்டில் உள்ள இலங்கை தூதரகம் மற்றும் டமாஸ்கஸில் உள்ள கௌரவ தூதரகத்துடன் தொடர்புகளை பேணுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

‘அரபு வசந்தம்’ என நாம் முஸ்லிம்களை குறிக்கவில்லை : மத்திய கிழக்கின் உதவிகளை தடுக்க வேண்டாம்

P.C.R பரிசோதனையை புறக்கணிப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை

பேருவளை மீன்பிடி துறைமுக செயற்பாடுகள் வழமைக்கு