உள்நாடு

புலமைப்பரிசில் பரீட்சை விவகாரம் – கல்வியமைச்சின் தீர்மானத்தில் மாற்றமில்லை

2024 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பகுதி-1 வினாத்தாளில் கசிந்துள்ள மூன்று கேள்விகளுக்கு முழு புள்ளிகளை வழங்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் மாற்றப்படாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அத்துடன் நடத்தப்பட்ட பரீட்சை நிலையானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களுக்கும் முன்னர் கசிந்ததாகக் கூறப்பட்ட 3 வினாக்கள் தொடர்பில் முழு புள்ளிகளை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்திருந்தது.

இது தொடர்பான பிரச்சனையை விசாரிக்க நியமிக்கப்பட்ட குழு, மீண்டும் பரீட்சை நடத்தினால் பிள்ளைகளுக்கு மன அழுத்தம் ஏற்படும் என குறிப்பிட்ட பரிந்துரைகளை அடிப்படையாகக் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.

எனினும் இன்றைய தினம் பெற்றோரால் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டும் என முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தைக் கருத்திற்கொண்டு மீண்டும் பரீட்சை நடப்படாது என கல்வியமைச்சு உறுதியாக தெரிவித்துள்ளது.

Related posts

இறைதூதர் இப்ராஹிமின் துணிச்சல் முஸ்லிம் சமூகத்துக்கு படிப்பினை

முதலாம் தர மாணவர்களை இணைத்து கொள்ளும் தேசிய வைபவம் இன்று

இலங்கையின் புதிய தூதுவர்கள் கிழக்கு மாகாண ஆளுநருடன் சந்திப்பு!