2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு கோரி பெற்றோர்கள் சிலர் கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (30) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்கள் சமூக ஊடகங்களில் கசிந்திருந்தது.
பின்னர், பரீட்சையை மீள நடத்துவது குறித்துத் தீர்மானிப்பதற்காகக் கல்வி அமைச்சினால் 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்த நிலையில் பரீட்சை மீள நடத்தப்படமாட்டாது என அக்குழு நேற்று (29) அறிவித்திருந்தது.
மேலும், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்குக் கசியப்பட்ட மூன்று வினாக்களுக்கான புள்ளிகள் இலவசமாக வழங்கப்படும் எனவும் அக்குழு அறிவித்திருந்தது.
இதனையடுத்து, பெற்றோர்கள் சிலர் ஒன்றிணைந்து தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்துமாறு கோரி கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.