அரசியல்உள்நாடு

ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகம் நியமனம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால், ஜனாதிபதி அலுவலகத்தின் சட்டப் பணிப்பாளர் நாயகமாக சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டார நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் நேற்று (27) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் சிரேஷ்ட சட்டத்தரணி ஜே.எம். விஜேபண்டாரவிடம் கையளிக்கப்பட்டது.

கொழும்பு ஆனந்த கல்லூரியின் பழைய மாணவரான விஜேபண்டார, கொழும்பு பல்கலைக்கழகத்தில் இளங்கலை (கௌரவ) பட்டம், திறந்த பல்கலைக்கழகத்தில் சட்டமானி (கௌரவ) பட்டத்தையும் பெற்றுள்ளார்.

சிரேஷ்ட சட்டத்தரணி ஜே. எம். விஜேபண்டார, கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் முன்னாள் விரிவுரையாளரும் ஆவார்

Related posts

தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட வேண்டுமென ஜனாதிபதி பணிப்பு

ரூமி மொஹமட் விளக்கமறியலில் [VIDEO]

ஜனாதிபதி தலைமையில் 110 நிறுவனங்களுக்கு விருதுகள்