வகைப்படுத்தப்படாத

“நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சுமூக சூழ்நிலை தற்போது உதயம்” – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – நாட்டை அபிவிருத்தி செய்வதற்கான சுமூக சூழ்நிலை தற்போது உதயமாகியுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது பிரதமர் இதனைக் கூறியுள்ளார்.

இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்ள சர்வதேசத்தில் இருந்து பல்வேறு உதவிகள் வழங்கப்படுகின்றன.

இதன் அடிப்படையில் பல்வேறு அபிவிருத்தி செயற்பாடுகள் நாடு முழுவதிலும் முன்னெடுக்கப்படுகின்றது.

தற்போது ஜி.எஸ்.பி வரிச்சலுகை கிடைத்துள்ளது.

இதன்மூலம் ஏற்றுமதிக்கான சந்தர்ப்பம் சலுகைகள் அதிகரித்துள்ளன.

இவை அனைத்தும் இலங்கையில் நீதியானதும், ஜனநாயகமுமான சூழ்நிலை உறுதிப்படத்தப்பட்டால் மாத்திரமே சாத்தியப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Nightclub collapse kills two in South Korea

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

State of Emergency extended