உள்நாடு

அரச ஊடகங்களுக்கு புதிய தலைவர்கள் நியமனம்

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி உதித கயாஷான் குணசேகர மற்றும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக கலாநிதி செனேஷ் திசாநாயக்க பண்டார ஆகியோர் வெகுஜன ஊடக அமைச்சர் விஜித ஹேரத்தினால் இன்று (25) நியமிக்கப்பட்டுள்ளனர்.

கலாநிதி உதித கயாஷான் குணசேகர களனி பல்கலைக்கழகத்தில் நுண்கலை கற்கைகள் பிரிவு சிரேஷ்ட விரிவுரையாளர் ஆவார்.

மேலும், கலாநிதி செனேஷ் திசாநாயக்க பண்டார சிரேஷ்ட விரிவுரையாளராகவும் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவும் விளங்குகிறார்.

Related posts

ஆபத்தான நிலையில் உள்ள பாரிய கட்டடம்!

மேலும் 355 பேர் பூரணமாக குணம்

Antigen பரிசோதனை ஜனவரி வரை தொடரும்