அரசியல்உள்நாடு

பொதுத் தெர்தலில் போட்டியிட மாட்டேன் ரணில் அறிவிப்பு

பொதுத் தெர்தலில் போட்டியிட மாட்டேனென முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடவோ அல்லது மீண்டும் பாராளுமன்றத்தில் ஆசனத்தைப் பெறவோ மாட்டேன் என்பதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆலோசகராக செயற்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைத்து, எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒரு மாபெரும் கூட்டணியை உருவாக்க ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

வார இறுதி நாட்களில் சுற்றுலா செல்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்

எவன்ட் கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு

ஜனாதிபதி ஊடகப் பிரிவு போலி செய்திகளை வெளியிடுகின்றது – ரொஷான் குற்றச்சாட்டு.