அரசியல்உள்நாடு

நேபாளம் சென்றார் கோட்டாபய ராஜபக்ஷ

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று திங்கட்கிழமை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மூலம் நேபாளத்தின் காத்மண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கி உள்ளார்.

அவர் பல்வேறு பௌத்த தலங்களுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும், பரத்பூருக்குச் செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் தூதரகத்தின் வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்தப் பயணம் அவரது தனிப்பட்ட பயணம் என்பதோடு, இலங்கையில் பல்வேறு துறைகளில் முதலீடு செய்துள்ள சவுத்ரி குழுமத்துடன் ராஜபக்ஷவுக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாகவும், சவுத்ரி குழுமம் விடுத்த அழைப்பின் பேரிலேயே நேபாளத்துக்கு சென்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜபக்க்ஷ இன்று ஜாம்சிகேலில் உள்ள ஹோட்டல் விவாண்டாவில் தங்குகிறார்

Related posts

அனைத்து மருந்தகங்களை உடனடியாக மூடுமாறு அறிவித்தல்

தேசிய நீர் வழங்கல் செயற்பாடுகளை டிஜிட்டல் மயமாக்க நடவடிக்கை.

உயர் கல்விமுறையில் மறுசீரமைப்பு அவசியம்