அரசியல்உள்நாடு

அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டுவருகிறேன் – அலி சப்ரி

இலங்கையின் வெளிவிவகார அமைச்சராக பணியாற்றி அலி சப்ரி தனது அரசியல் வாழ்க்கையை முடிவிற்கு கொண்டுவரவுள்ளதாக தெரிவித்துள்ளார்

சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது

பொதுச்சேவையை நிறைவுசெய்யும் இவ்வேளையில் எனது முயற்சிகளை ஆதரித்த,வழிகாட்டிய மற்றும் ஆக்கபூர்வமாக விமர்சித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்க விரும்புகின்றேன்.

உங்கள் நம்பிக்கையும்,ஊக்கமும் தான் இந்த பயணம் முழுவதும் என்னை தாங்கிய தூண்கள்.

2019ம் ஆண்டு நான் அரசியலில் காலடி எடுத்துவைத்தபோது எனது நாட்டிற்கு சேவைசெய்ய குறிப்பாக நீதியமைச்சை சீர்செய்வதில், எனது வாழ்நாளின் பெரும்பகுதியை நான் அர்ப்பணித்த துறையில்,ஒரு தெளிவான பார்வையால் உந்தப்பட்டேன்.

நாங்கள் பயணி;கப்போகும் பாதை எதிர்பாராதவிதமாக கரமுரடானதாக மாறுகின்றது.

உலகமும் நாடும் விரைவில் அசாதாரண சவால்களின் பிடியி;ல் சிக்கின.

கொவிட் 19 பெருந்தொற்றும்,அதன் பின்னர் உக்ரைனில் வெடித்த போரும்,அதன் தீவிரமான நீண்டவிளைவுகளும்,சர்வதேச ஸ்திரதன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தின.இது எங்கள் நாட்டின் வரலாற்றில் மிக மோசமான நெருக்கடிக்கு வழிவகுத்தது.நாம் நினைத்து பார்க்க முடியாத வகையில் எங்களின் மீள் எழும் திறனை சோதனை செய்தது.

இந்த கடினமான காலங்களில் எனக்கு பல பதவிகளில் சேவையாற்றுவதற்கான கௌரவம் கிடைத்தது,நீதியமைச்சராக, நிதியமைச்சராக இறுதியாக வெளிவிவகார அமைச்சராக.ஒவ்வொரு பதவியும் அவற்றிற்கே உரிய சவால்களுடன் வந்தன.

என்மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை நிறைவேற்றுவதற்கு நான் என்னால் முடிந்தளவிற்கு சிறப்பாக செயற்பட்டேன்.

வெளிவிவகார அமைச்சராக உலகளாவிய ரீதியில் தலைவர்கள் இராஜதந்திரிகள் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களை சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இலங்கையை பொருளாதாரநெருக்கடியிலிருந்து மீட்சியை நோக்கி நகர்வதற்கான முயற்சிகளின் போது அவர்களின் தளர்ச்சியற்ற ஆதரவும்,இணைந்த செயற்பாடுகளும் எங்களிற்கு அளவிடமுடியாத பெறுமதிஉடையவையாக காணப்பட்டன.

எங்களின் இருள்மயமான தருணங்களி;ல் வெளிப்படுத்தப்பட்ட நன்றிக்காக நான் ஆழமான நன்றியுடையவனாகயிருக்கின்றேன்.

பொதுச்சேவை என்பது எப்போதும் இலகுவான பாதையில்லை.அதற்கு நேரமும் சக்தியும்மாத்திரமல்ல ஆழமான தியாகமும் அர்ப்பணிப்பும் அவசியம்.

ஒருவன் நேர்மையுடன் சேவையாற்ற முயலும்போது ,அந்த தியாகங்கள் இன்னமும் பெரிய விடயங்களாக உணரப்படும்.

ஆனால் நான் எனது பயணத்தை பற்றி சிந்திக்கும்போது, எங்கள் தேசத்தின்சவாலான தருணங்களில் என்னால் வழங்கப்பட்ட பங்களிப்பு குறித்து ( அது எவ்வளவு சிறியதாக காணப்பட்டாலும்)நான் பெருமிதம் கொள்கின்றேன்.

அரசியலில் ஈடுபடுவதுஎன்பது எனக்கு இயல்பாக கிடைத்த ஒருபாதையில்லை.

எதிர்பார்த்த எதிர்பாராத பல சவால்களை எதிர்கொள்ளவேண்டியிருந்தது,.

ஆனால் இவற்றின் போது பல வருடங்களிற்கு முன்னர் எனது தந்தை வழங்கிய ஆலோசனையை நான் இறுக்கமாக பின்பற்றினேன். ‘உங்களால் கட்டுப்படுத்த முடிந்தவற்றை கட்டுப்படுத்துங்கள், கட்டுப்படுத்த முடியாதவை குறித்து நேரத்தை வீணடிக்கவேண்டாம்” இந்த வார்த்தைகள் எப்போதும் எனக்கு வழிகாட்டியுள்ளன,பாதை எதுவென்பது தெரியாத தருணங்களிலும் முன்னோக்கி இந்த வார்த்தைகள் எனக்கு உதவியுள்ளன.

தற்போது அரசியல் வாழ்க்கையிலிருந்து விலகும் இந்த தருணத்தில் எனது முதல் ஆர்வமான சட்ட துறையில் மீண்டும் ஈடுபடுவது குறித்து எதிர்பார்த்துள்ளேன்.

Related posts

புலனாய்வுத்துறை முன்னாள் பணிப்பாளரின் சாட்சியங்களை ரிப்கான் பதியுதீன் நிராகரிப்பு

தபால் வாக்குச் சீட்டு விநியோகம் நிறைவடையும் தருவாயில்

editor

சாரதிகளுக்கு எதிரான அபராத தொகையை அதிகரிப்பு ?