தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் வினாத்தாளில் சில கேள்விகளை கசிந்தமைக்காக மஹரகம தேசிய கல்வி நிறுவகத்தின் (திட்டமிடல் பிரிவு) பணிப்பாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 57 வயதுடையவரெனவும் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளரே இவ்வாறு பல வினாத்தாள்களை கசியவிட்டமை பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறிப்பிட்டுள்ளனர்.