இலங்கையின் பிரதமராக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இன்று (23) பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தேர்தல் நடைபெறும் வரை காபந்து அரசாங்க அமைச்சரவையாக அவருடன் நான்கு பேர் கொண்ட அமைச்சரவை பதவிப் பிரமாணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் தற்போதைய பாராளுமன்றம் இன்று கலைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இதன்படி, நவம்பர் மாத இறுதியில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெற அதிக வாய்ப்புகள் உள்ளன.