அரசியல்உள்நாடு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்து பவித்ரா உள்ளிட்ட மூவர் நீக்கம்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களான பவித்ரா வன்னியராச்சி, ரோஹித அபேகுணவர்தன, எஸ்.எம். சந்திரசேன ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இது தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுடன் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நீக்கப்பட்ட உறுப்பினர்கள் நாளை 21 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளருக்கு மாறாக பிறிதொரு வேட்பாளருக்கு ஆதரவளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

கடந்த 24 மணிநேரத்தில் 426 பேர் கைது

இரண்டு பிரபலமான புதிய அங்கீகாரங்களை பெற்ற Amazon Campus!

உயர்தரப் பரீட்சை தொடர்பிலான முக்கிய அறிவித்தல்