வாக்கு எண்ணிக்கை இடம்பெறும் போது அந்த முடிவுகளை தொலைக்காட்சிகள் அல்லது பெரிய திரைகளை பயன்படுத்தி வீதிகளின் அருகில் ஒன்று கூடி பார்ப்பது சட்டவிரோதம் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர். எம். ஏ. எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதுபோன்ற கூட்டங்களை பாதுகாப்பு தரப்பினர் கலைக்கவோ அல்லது சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவோ வாய்ப்பு உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்று (19) காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஜனாதிபதி தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் தெரிவித்தார்.
மேலும் கருத்து தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர்,
வாக்குப்பதிவுக்குப் பிறகு மற்றும் வாக்கு எண்ணிக்கையின் போது, எக்காரணம் கொண்டும் வீடுகளை விட்டும், வாக்கும் எண்ணும் நிலையங்களுக்கு அருகில் அல்லது வீதிகளில் இருக்க வேண்டாம் என கோருகிறோம்.
வாக்கு எண்ணிக்கையின் போது, மக்கள் தொலைக்காட்சி அல்லது பெரிய திரையைப் பயன்படுத்தி வீதிகளில் ஒன்று கூடி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பது, முடிவுகள் ஒளிபரப்பப்படும் போது குழுவாகத் திரண்டு, பட்டாசுகளை வெடித்தல், வீதிகளில் வினோதமாக இருத்தல், உள்ளிட்ட செயற்பாடுகளுக்கு சட்டத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளன.
இத்தகைய கூட்டங்கள் அனைத்தும் சட்டவிரோமானது. பாதுகாப்புப் பிரிவினர் அவர்களை கலைக்கலாம் அல்லது அவர்களுடன் தொடர்புடையவர்களை கைது செய்யலாம்”. என்றார்.