அரசியல்உள்நாடு

பாடசாலைகள் விடுமுறை குறித்து கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

எதிர்வரும் செப்டெம்பர் 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணைக்குழுவின் தலைவரின் கோரிக்கைக்கு அமைய கல்வி அமைச்சு இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 23ஆம் திகதி பாடசாலை மீள ஆரம்பிக்கப்படும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மழையுடன் கூடிய காலநிலை

பால்மாவின் விலை மேலும் குறைவடையும்

ரஷ்ய படையினரின் பிடியில் இருந்த 7 இலங்கை மாணவர்கள் மீட்பு