அரசியல்உள்நாடு

ரணிலின் அரசாங்கம் தயாரித்த புலமை பரிசில் பரீட்சை வினாத்தாளை வெளியிட்டது யார் அநுர ? சஜித் பிரேமதாச கேள்வி

“இயலும்” என்று கூறுகின்ற ஜனாதிபதியால் புலமை பரிசில் பரீட்சையை முறையாக நடத்த முடியாமல் போயுள்ளது. பரீட்சைக்கு முன்பதாகவே வினாத்தாள் வெளியாகி இருக்கின்றது. அதன் மூலம் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக உரிய நியாயத்தை பெற்றுக் கொடுப்போம். இயலும் என்று கூறிக் கொள்கின்ற இந்த அரசாங்கத்தினால் புலமைப் பரிசில் பரீட்சையையேனும் முறையாக நடத்த முடியாமல் போயுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இந்த வினாத்தாள் வடமேல் மாகாணத்தில் எந்தப் பகுதியில் வெளியாகி இருக்கின்றது என்பது குறித்து ஆராய்ந்து பார்க்குமாறு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றோம். எந்தக் கட்சிக்குரியவர் இந்த வினாத்தாள் கேள்விகளை லீக் செய்தார் என்பதை ஆராய்ந்து பார்க்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். இந்த விடயத்தை அநுர குமார திசாநாயக்கவிடம் கேட்கின்றோம். இது குறித்து அவருக்கு நன்றாகத் தெரியும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 70 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் அம்பலாங்கொடை நகரில் செப்டம்பர் 18 ஆம் திகதி வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே எதிர்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அனைத்து புலனாய்வுத் துறை அறிக்கைகளின் பிரகாரம் ஐக்கிய மக்கள் சக்தியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. இது என்னுடைய தனிப்பட்ட வெற்றி அல்ல துன்பத்தில் இருக்கின்ற மக்களின் வெற்றியாகும். 21 ஆம் திகதி 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் வெற்றி பெற்று 220 இலட்சம் மக்களுடைய யுகம் ஆரம்பமாகின்ற போது ரணில் விக்ரமசிங்க அநுரகுமார திசாநாயக்க ஆகியோரின் திருட்டு ஒப்பந்தம் நிறைவுக்கு வரும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை தலதா மாளிகையில் ஆசீர்வாதங்களை பெற்று மக்கள் முன்னிலையில் வைத்து ஆரம்பித்த தேர்தல் பிரச்சார பணிகள் இன்றோடு நிறைவடைகின்றது. அத்தோடு எமது வெற்றியை அமைதியான முறையில் ஒற்றுமையாகவும் நல்லிணக்கத்தோடும் கொண்டாடுமாறு வேண்டுகோள் விடுக்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வெற்றியோடு நாட்டை கட்டி எழுப்பும் வேலைத்திட்டங்களும் வரும். துன்பத்தில் இருக்கின்ற மக்களை இன்பத்தின் பக்கம் கொண்டு செல்வதற்கு ஜேவிபி, ஐதேக, மொட்டு என்று சிந்திக்காமல் ஐக்கிய மக்கள் சக்தியை வெற்றி பெறச் செய்யுமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்தார்.

அத்தோடு மீனவர்களுக்கான எரிபொருள் நிவாரணத்தை வழங்குவோம். மீன்பிடி தொழிலுக்கான உபகரணங்களின் விலைகள் அதிகரித்து காணப்படுகின்றமையால் அதற்கான நிவாரணங்களையும் வழங்கி மீன் பிடித்தொழிலை விரிவாக்குவோம். உலகிலே முதல் தரத்தில் காணப்படுகின்ற சிலோன் சினமன் கறுவாப்பயிரை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு வழியமைப்போம் என எதிர்க்கட்சி தலைவர் தெரிவித்தார்.

அத்தோடு உற்பத்தி தொழிற்துறை கலாச்சாரத்தை முன்னெடுத்து கொக்கல சுதந்திர வர்த்தக வலையத்தைப் போன்று மேலும் வர்த்தக வலையங்களை உருவாக்குவோம். தொழிற்சாலை செயற் திட்டத்தை கிராமங்களுக்கு கொண்டு சென்று உற்பத்தி தொழிற் துறையை அபிவிருத்தி அடையச் செய்வோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கும் முச்சக்கர வண்டி உரிமையாளர்களுக்கும் எரிபொருள் நிவாரணங்களை வழங்குவதோடு, 24 மாதங்களுக்குள் வறுமையை ஒழிக்கும் முகமாக ஐந்து திட்டங்களின் கீழ் இல்லத்தரசிகளை மையமாகக் கொண்டு மாதம் ஒன்று தலா 20000 ரூபா நிவாரணத்தை வழங்குவோம் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

சம்பிக்கவின் வாகன விபத்து மனு விசாரணை ஒத்திவைப்பு

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் கொள்கை என்ன – கேள்வி எழுப்புகிறார் கலீலுர்ரஹ்மான்.

நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் விபரம்