அரசியல்உள்நாடு

எல்லோரிடமும் குறைகள் உண்டு – நாங்கள் அதை சரிசெய்வோம் – நாமல்

ராஜபக்ச குடும்பம் பொது மக்களின் பணத்தை திருடவில்லை என்பதை எந்த நீதிமன்றத்திலும் நிரூபிக்கத் தயார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

காலியில் இடம்பெற்ற மக்கள் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“நல்லாட்சி அரசாங்கம் நெல் சேமிப்பதற்காக மத்தளை கட்டப்பட்டதாக நினைத்தது.
சூரியவெவ மைதானத்தை மூடினார்கள்.

எம்மை சிறையில் அடைத்த போதும் நாங்கள் திருடவில்லை.

முடிந்தால், எங்கள் மீது வழக்குத் தொடருங்கள்.
குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க தயார். எல்லோரிடமும் குறைகள் உண்டு. நாங்கள் அதை சரிசெய்வோம்.”

Related posts

இன்று 8 மணி நேர நீர் வெட்டு அமுலில்

பிரதமர் தினேஷ் பசில் ராஜபக்சவை சந்தித்தார்

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு அமுலுக்கு