அரசியல்உள்நாடு

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. வினோ ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்கு ஆதரவு வழங்குவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஜனாதிபதியின் அரசியல் காரியாலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) பொது வேட்பாளரை ஆதரிக்கின்றது. ஆனால் அதற்கு நான் உடன்பாடில்லை. அது ஒரு விசப் பரீட்சை. நான் வன்னி மக்களின் கருத்துகளை கேட்டறிந்துள்ளேன். அவர்களது நிலைப்பாடு தான் எனது நிலைப்பாடும் என அவர் முன்னதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

கச்சா எண்ணெய் விலையில் சரிவு

ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் விளக்கமறியலில்

கொழும்பு துறைமுக நகரில் இலங்கையர்களுக்கும் வேலைவாய்ப்பு