அரசியல்உள்நாடு

உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளர் இல்யாஸுக்கு இடும் வாக்கு செல்லுபடியற்றது

வேட்புமனு தாக்கல் செய்து உயிரிழந்த ஜனாதிபதி வேட்பாளர் அய்துரூஸ் முஹம்மது இல்யாஸுக்கு பதிலாக வேறொரு வேட்பாளரை நியமிக்காத நிலையில், அவருக்கு வழங்கபபடும் வாக்கு செல்லுபடியற்றதாக கருதப்படும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல்களுக்காக வேட்பு மனு தாக்கல் செய்து ஜனாதிபதி வேட்பாளர் பெயர் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்த அய்துரூஸ் முஹம்மது இல்யாஸ் கடந்த ஆகஸ்ட் 22 ஆம் திகதி உயிரிழந்த நிலையில், அவருக்கு பதிலாக இன்னொருவரை நியமிக்க 3 நாட்கள் கால அவகாசம் தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், தெரிவித்த நாளில் வேறு வேட்பாளரை நியமிக்காததால் வாக்குச் சீட்டு மற்றும் வாக்கெடுப்புக்குரிய ஏனைய அனைத்து ஆவணங்களிலும் குறித்த வேட்பாளரின் பெயர் நீக்கப்பட்டுள்ளதென்பதாகக் கருதப்படுமெனவும் அல்லது வாக்கை அடையாளமிட்டிருப்பின் அது நிராகரிக்கப்பட வேண்டிய வாக்குச் சீட்டாகக் கருதப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பெட்ரோல் பெற வரிசையில் நின்ற மற்றொரு நபர் பலி

‘நிலுவைத்தொகை செலுத்தப்படாவிடின் விடைத்தாள் மதிப்பீடு இடம்பெறாது’

வலுக்கும் ஒமிக்ரோன்