அரசியல்உள்நாடு

சார்ள்ஸ் நிர்மலநாதனை சந்தித்த ஜனாதிபதி ரணில்

மன்னார் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகாக வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மரியாதையின் நிமித்தம் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனை அவரது இல்லத்தில் இன்று (17) சந்தித்திருந்தார்.

இதன்போது மன்னார் தமிழரசுக் கட்சியின் கிளை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் இணைந்து ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு தங்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர்.

அதேநேரம் தமிழரசுக் கட்சியின் மன்னார் கிளையின் இளைஞர் அணி மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் வருகை தந்து பொது மக்களுடன் சார்ள்ஸ் நிரமலாதனின் வீட்டில் கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றிருந்தது.

சந்திப்பு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவிக்கையில், இது ஒரு மரியாதையின் நிமித்தமான சந்திப்பு எனவும் ஜனாதிபதி தேர்தலில் ஒட்டுமொத்த மன்னார் மக்கள் மற்றும் ஆதரவாளர்களின் முடிவே எனது முடிவு எனவும் மக்கள் யார் பக்கமோ அவர்களின் பக்கமே நான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

மேற்கு முனைய பங்கு விவகார ஒப்பந்தம் கைச்சாத்து

பொதுத் தேர்தல் திகதி தொடர்பான அறிவிப்பு

வயிற்றில் ஆணியுடன் நாட்டுக்கு, திரும்பி வந்த பெண்!