அரசியல்உள்நாடு

நாட்டுக்கும் நமக்கும் வெற்றி கிட்டும் வழி ரணிலின் வழியே – வேலுகுமார் எம்.பி

அஸ்வசும கொடுப்பனவை மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கு விரிவுபடுத்த ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்” என கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கம்பளையில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் தெரிவித்தார்.

எல்லா அரசாங்கங்களிலும் போல, மலையக பெருந்தோட்ட மக்கள் ஓரம் கட்டப்பட்டு வருகின்றனர். குறிப்பாக நிவாரண கொடுப்பனவுகளின் போது, ஏதோ ஒரு காரணம் காட்டி தோட்ட மக்கள் தட்டி கழிக்கப்படுகின்றனர்.

ஆனால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அஸ்வசும கொடுப்பனவை மலையக பெருந்தோட்ட பகுதிகளுக்கும் விரிவுபடுத்தி வழங்க ஒப்புதல் அளித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு முதல் ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதமராக இருந்த அரசாங்கத்திலேயே மலையக மக்களுக்கு அதிகபட்சமான வேலைகள் நடைப்பெற்றது.

தனி வீட்டு திட்டத்துடனான புதிய கிராமங்கள், நுவரெலியா மாவட்டத்தில் பிரதேச சபைகளின் அதிகரிப்பு மற்றும் பிரதேச செயலகங்கள் அதிகரிப்பு என பல விடயங்களை கூறிக்கொண்டு போக முடியும்.

எதிர்வரும் 22 ஆம் திகதி எமது நாட்டின் ஒன்பதாவது ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் பதவி ஏற்ப்பது உறுதி.

அதன் பின்னர் அன்று நாம் நிறுத்திய வேலை திட்டங்களை மீண்டும் ஆரம்பித்து முன்கொண்டு செல்ல முடியும். எனவே நாட்டுக்கும் நமக்கும் வெற்றி கிட்டும் வழி ரணிலின் வழியே ஆகும்.

Related posts

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்பு [PHOTOS]

அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்படும் தபால் சேவை!

இலங்கையின் அனைத்து பிரஜைகளின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – ஜனாதிபதி அநுர

editor