அரசியல்உள்நாடு

ஊரடங்கை அறிவிக்கும் நோக்கமில்லை – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு

தேர்தல் வாக்களிப்பு தினத்தன்று ஊரடங்கை பிரகடனப்படுத்தும் நோக்கம் எதுவுமில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தேர்தல் காலத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் பொலிஸாரும் விசேட அதிரடிப்படையினரும் ஈடுபடுத்தப்படுவார்கள் அவர்களிற்கு தேவையான நேரத்தில் உதவுவதற்கு பாதுகாப்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டிருப்பார்கள் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஊரடங்கை அறிவிப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதியிடமே உள்ளது ஜனாதிபதி தேர்தல் பாதுகாப்பு குறித்து அவசியமான உத்தரவுகளை வழங்கியுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இதுவரை 500 தேர்தல் பிரச்சார கூட்டங்கள் நாடாளவியரீதியில் இடம்பெற்றுள்ளன எந்த வன்முறையும் இடம்பெறவில்லை, நீதியான சுதந்திரமான தேர்தலை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபடுவார்கள் என அவர் தெரிவித்துள்ளார்

Related posts

அரசினுள் ஸ்ரீ.சு.கட்சிக்கு தொடர்ந்தும் பாரபட்சம்

அரச ஊடக நிறுவனங்களுக்கு திறைசேரியில் இருந்து நிதி

பெற்ற குழந்தையை மண்ணினுள் புதைத்த தாய் [VIDEO]