ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள கிழக்கு மாகாணத்தில் இரண்டு பாடசாலைகள் முன்கூட்டியே மூடப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, திருகோணமலை மாவட்டத்தில் வாக்கு எண்ணும் நிலையமாகப் பயன்படுத்தப்படும் விபுலானந்த மகா வித்தியாலயமும், மட்டக்களப்பு மாவட்டத்தில் வாக்கு எண்ணும் நிலையமாகப் பயன்படுத்தப்படும் இந்து வித்தியாலயமும் நாளை (11) முதல் மூடப்படும் என மாகாணக் கல்விச் செயலாளர் எச்.ஈ.எம்.ஜி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்துடன், வாக்களிப்பு நிலையங்களாகப் பயன்படுத்தப்படவுள்ள ஏனைய பாடசாலைகளும் எதிர்வரும் 20ஆம் திகதி மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாடசாலைகள் 23ஆம் திகதி வழக்கம் போல் திறக்கப்படும் என்றும், வாக்கு எண்ணும் மையங்களுக்கு பயன்படுத்தப்படும் இரண்டு பாடசாலைகள் 24ஆம் திகதி திறக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.