அரசியல்உள்நாடு

இன மத பேதங்கள் பாராது நாம் ஒன்றிணைவோம் – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் ஊழல் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பங்காளர்களாக ராணுவத்தினரை இணைத்து இந்த நாட்டை ஊழலில் இருந்து மீட்டெடுக்கின்ற பயணத்தின் முன்னோடிகளாக நியமித்துக் கொள்வோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக ஏற்பட்டுள்ள குழப்பநிலையையும் இந்த தீவிரவாத தாக்குதலுக்கு முன்னுரிமை வழங்கிய குழுவையும், அதன் பிரதான சூத்திரதாரியையும் கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை பாரபட்சமின்றி முன்னெடுப்போம்.

எமது நாட்டின் கொடிய நோயாக மாறி இருக்கின்ற போதைப்பொருள் விநியோகத்தை முற்றாக ஒழிப்பதற்கு ராணுவத்தினரின் பூரண பங்களிப்பையும் பெற்றுக் கொள்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டு அரங்கில் ஐக்கிய மக்கள் சக்தியின் இராணுவ சக்தி இன்று (10) ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டை பாதுகாப்பதற்கும், நாட்டை ஒருமைப்படுத்துவதற்கும் தொடர்ந்து உயிரை துச்சமாக மதித்து தமது கடமைகளை முன்னெடுக்கின்ற முப்படையினர், பொலிஸார், சிவில் பாதுகாப்பு படையினர், உள்ளிட்ட ராணுவத்தினரை அரசியல் காலங்களில் அரசியல் கால்பந்துகளாக நடத்தப்படுகின்றனர்.

தேர்தல் காலங்களில் பல சந்தர்ப்பங்களில் அனாதைகளாக கைவிடப்படுகின்றனர்.

பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் முப்படையினரும் பொலிசஸார், பாதுகாப்பு பிரிவில் உள்ளவர்களினதும் உரிமைகள் குறித்து குரல் எழுப்பியதோடு உரிமைகளை பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டிருக்கின்றது.

ராணுவத்தினருக்கான ஜனாதிபதி செயலணி.

அரசாங்கத்திடம் கேள்வி எழுப்புவது எதிர்க்கட்சியின் செயற்பாடாக இருக்கின்றது. 21 ஆம் திகதிக்கு அந்த செயற்பாட்டிற்கு 220 இலட்சம் மக்களின் ஆசீர்வாதத்தோடு தீர்வினையும் பதிலையும் வழங்குகின்ற காலம் ஆரம்பமாகும். 48 மணித்தியாலத்திற்குள் முப்படையினரும் பொலிஸார், சிவில் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்டவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி செயலணி ஒன்றை உருவாக்குவோம். அதன் ஊடாக குறிப்பிட்ட காலத்துக்குள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுக் கொடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ராணுவத்தினரின் நலன்புரி விடயங்களுக்கு புதிய வேலை திட்டங்கள்.

வன் ரேங்க் வன் பென்ஷன் வேலைத்திட்டத்தை முன்னெடுப்போம்.
ராணுவத்தினரின் நலன்புரி செயற்பாடுகளுக்காக உள்ள இராணுவ அதிகார சபைக்கான சட்ட ரீதியான அதிகாரங்கள் போதுமானதாக இல்லை. எனவே ராணுவத்தினருக்காக தனியான திணைக்களம் ஒன்றும் உருவாக்கப்படும்.

இவர்களுக்கு சமூகத்தில் மேலும் வருமானத்தை பெறக்கூடிய சந்தர்ப்பத்தை உருவாக்கி, வர்த்தக செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கும், தொழில் முனைவோர்களாக மாறுவதற்கும் தேவையான ஆரம்ப மூலதனத்தையும் வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

கணிப்பிட முடியாத அளவு உயிரை பணயம் வைத்து தொடர்ந்து செயல்பாடுகளை முன்னெடுக்கின்ற முப்படையினர், சிவில் பாதுகாப்பு துறையினர் மற்றும் பொலிஸார் எதிர்கொள்கின்ற பிரச்சினைகள் குறித்து கண்டறிந்துள்ளோம். அதற்கான தீர்வினை பெற்றுக் கொடுக்க வழி அமைத்துள்ளோம். இராணுவ கட்டமைப்புக்குள் சில குறைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றையும் நிவர்த்தி செய்வோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

அக்ரஹார காப்புறுதி திட்டத்தையும் ஓய்வூதியத்தையும் முறையாக வழங்குவோம். நிலையான வைப்பிற்கான 15 வீத வட்டியை வழங்குவதோடு அதனை அதே நிலையில் செயற்படுத்துவோம்.

அங்கவீனமடைந்த ராணுவத்தினரின் நலன்புரி விடயங்களுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படுவோம். கண், கை, கால் உள்ளிட்ட அவயவங்களை இழந்து இரத்தம் சிந்தி, எம்மை பாதுகாத்த ராணுவத்தினர் எம்மால் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய சகல வரப்பிரசாதங்களையும் நாம் பெற்றுக் கொடுப்போம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன மத பேதங்கள் பாராது நாம் ஒன்றிணைவோம்.

அர்ப்பணிப்புடன் செயற்பட்ட ராணுவ குடும்பங்களின் பிள்ளைகளுக்கும், வடகிழக்கில் உள்ள தமிழ் குடும்பங்களின் பிள்ளைகளுக்கும் தனியான வேலை திட்டங்களை உருவாக்குவோம்.

யுத்தத்திற்கு பின்னர் இன மத பேதங்களின்றி அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும். வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு உள்ளிட்ட ஒன்பது மாகாணங்களில் உள்ளவர்களும் ஒன்றாக இணைந்து இந்தப் பொறுப்புக்களை செயல்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

‘பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள கடன் மறுசீரமைப்பு திட்டம் வெற்றியடைய வேண்டும்’

ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக விசேட நிதியம்

பாடசாலை வேன் கட்டணமும் அதிகரிப்பு