அரசியல்உள்நாடு

ரணில் அநுரவுடன் டீல் செய்வதற்கு முன்னர் கடவுச்சீட்டு மற்றும் விசா வரிசையை இல்லாது செய்யவும் – சஜித்

நாட்டை தோல்வி அடையச் செய்கின்ற, நாட்டைச் சீரழிக்கின்ற, நாட்டை கொளுத்துகின்ற ரணில் விக்ரமசிங்க அநுர திசாநாயக்க ஆகியோரின் அண்ணன் தம்பி ஜோடி, அரசியல் ஜோடியாக மாறி இருக்கிறது. தன்னைத் தோல்வி அடையச் செய்வதே அவர்களுடைய நோக்கம்.

அவர்கள் அவர்களுக்குள்ளே இரண்டாவது விருப்பு வாக்கை பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே இரண்டாவது விருப்பு வாக்கு தேவையில்லை. முதலாவது சுற்றிலே ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். இந்த மக்கள் அரசியல் டீல்களுக்கு ஏமாற மாட்டார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த ஜனாதிபதி தேர்தலிலே களம் இறங்கி இருக்கின்றார். ஆனாலும் அவருக்கு கடவுச்சீட்டுகளையும் விசாக்களையும் வழங்க முடியாதுள்ளது. இவர்களால் நாட்டின் பிரச்சினையை தீர்க்க முடியாது. கடவுச்சீட்டுக்கும் வீசாவுக்கும் வரிசை காணப்படுகின்றது.

ஒன்றிணைந்த ஆடை உற்பத்தியாளர் சங்கம் கூறுவதைப் போன்று கொள்வனவாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும், தொழில்நுட்ப சேவை வழங்குனர்களுக்கும் எமது நாட்டுக்கு வருவதற்கு விசாக்களை வழங்க முடியாது போயுள்ளது. இது எமது நாட்டிற்கு தாக்கத்தை செலுத்தும். சுற்றுலாத் துறையும் இதனால் வீழ்ச்சி அடையும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அநுரவுடன் திருட்டுத்தனமாக டீல் செய்வதை விட்டுவிட்டு விசாக்களை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கின்றோம். இவர்கள் நாட்டை பொறுப்பேற்றால் நாட்டிற்கு பிணையும் இல்லாமல் போகும். ரணில்-அநுர சூழ்ச்சியை தோல்வி அடையச் செய்ய வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு ஐக்கிய மக்கள் கூட்டணி ஏற்பாடு செய்த 41 ஆவது மக்கள் வெற்றி பேரணி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் செப்டம்பர் 09 திகதி கண்டியில் மிக வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது. இதில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

அரசாங்கம் வேண்டுமென்றே வீசா மற்றும் கடவுச்சீட்டுக்கான வரிசையை உருவாக்கியது. மோசடியான கொடுக்கல் வாங்கல்களினாலேயே இந்த நிலை உருவானது. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக விசா மற்றும் கடவுச்சீட்டுக்கான வரிசை உருவாக்கத்திற்கு காரணமான திருட்டை மக்களுக்கு வெளிப்படுத்துவோம். தவறிழைத்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி வழங்கப்படும்.

தோட்டத் தொழிலாளர்களுக்கும் காணிக்கான உரிமை இருக்கின்றது. இளைஞர் சமூகத்திற்காக பயிரிடப்படாத காணிகளை வழங்கி, அவர்களை சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக பலப்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

அனைத்து இடங்களிலும் வீடமைப்பு மற்றும் நகரமயமாக்கல் பிரச்சினை காணப்படுகின்றது. எனவே முறையான அடிப்படையில் நகரமயமாக்கல் திட்டத்திற்கு செல்வோம். நீரில்லாத பிரதேசங்களுக்கு நீர் விநியோகத் திட்டங்களை முன்னெடுப்போம். நீர் மக்களின் மனித உரிமைகளில் ஒன்று என்பதால் அதனை நாம் வழங்குவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மீண்டும் கம்உதாவ யுகம்.

வீடுகளை அமைக்கின்ற கம் உதாவ யுகத்தை மீண்டும் உருவாக்குவோம். இந்த அரசாங்கமும், தற்போதைய பதில் ஜனாதிபதியின் ஆட்சியிலும், கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியின் காலத்திலும் மேற்கொள்ளப்பட்ட அக்கறையற்ற தீர்மானங்களால் வறுமை அதிகரித்து காணப்படுகின்றது.

ஏழைகள் தொடர்ந்தும் நிவாரணங்களை எதிர்பார்ப்பதில்லை. எனவே கெமிதிரிய, அஸ்வெசும, ஜனசவிய, சமுர்த்தி போன்ற வேலைத்திட்டங்களில் காணப்படுகின்ற சிறந்த விடயங்களை உள்ளடக்கி, வறுமையை ஒழிக்கின்ற வேலைத் திட்டத்தை முன்னெடுத்து, 24 மாதங்களுக்கு மாதாந்தம் 20 000 ரூபா வழங்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தை முதன் முதலில் தலதா மாளிகையில் பிக்குகளுக்கே வழங்கினோம். வங்குரோத்தடைந்த நாட்டை மீண்டும் கட்டி எழுப்புகின்ற பயணத்திற்கு பிக்குகளோடு, மக்களையும் சேர்த்து ஐக்கிய மக்கள் சக்தி ஒப்பந்தம் ஒன்றுக்கு வந்திருக்கிறது.

எமது நாடு பல அனர்த்தங்களை எதிர்கொண்டுள்ளது. இன, மத, குல, வகுப்பு, கட்சி வேதங்கள் இன்றி இந்த அனர்த்தங்களை எதிர்கொண்டு அசௌகரியத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த நாட்டில் உள்ள மிகப்பெரிய செல்வந்தர்களை தவிர 220 இலட்சம் மக்கள சகித்துக் கொள்ள முடியாத அளவில் துன்பத்தை அனுபவிக்கின்றனர். இந்த துன்பத்திலிருந்து மக்களை மீட்டெடுப்பது தமது பொறுப்பு என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

Related posts

அமைச்சர் உபாலி பன்னிலகேவின் எம்.பி பதவிக்கு எதிராக வழக்கு

editor

ஷானி அபேசேகரவுக்கான விளக்கமறியல் நீடிப்பு

‘நனோ நைட்ரஜன்’ திரவ உரம் தாயகத்திற்கு