அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

ரிஷாட் எம்.பி யின் மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தர்கள் பலர் ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவு

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்துவதற்கு தமது பூரண ஆதரவை வழங்குவதாக ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் பலரும் தெரிவித்தனர்.

வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் அலிகான் ஷரீப், முசலி பிரதேச சபை முன்னாள் தலைவர் ஏ.ஜீ.எச். சுபிஹான், முசலி பிரதேச சபை முன்னாள் உறுப்பினர்களான ஏ.ஆர்.எம்.ரஸ்மின், ஹனீப் மக்பூல், எம்.எச்.எம்.காமில், அஷ்ஷெய்க் அப்துர் ரஹ்மான் மற்றும் முசலி உலமா சபை முன்னாள் தலைவர் எம்.தௌபீக் உட்பட கட்சி செயற்பாட்டாளர்கள் பலர் கொழும்பு பிளவர் வீதியில் அமைந்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் சந்தித்து தமது ஆதரவை வெளியிட்டனர்.

வடக்கிலுள்ள முக்கிய பிரதேச சபைகளில் ஒன்றான முசலி பிரதேச சபையின் ஒரே ஒரு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர் தவிர அனைத்து உறுப்பினர்களும் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளதோடு, நாட்டை நெருக்கடி நிலையிலிருந்து மீட்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கும் நிலைப்பாட்டில் தமது கட்சி ஆரம்பம் முதலே இருந்ததாகவும் கட்சித் தலைமையும் அந்த நிலைப்பாட்டையே கொண்டிருந்ததாகவும் கட்சி முக்கியஸ்தர்கள் சுட்டிக்காட்டினர்.

ஆனால், கட்சியிலுள்ள சிலரது அழுத்தம் காரணமாக அவர் வேறு வேட்பாளரை ஆதரிக்க முடிவு செய்தார். இருந்தாலும் எமது கட்சியின் பெரும்பான்மையானவர்களின் ஆதரவு ஜனாதிபதிக்கே வழங்கப்படுகிறது எனவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஏனைய வேட்பாளர்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய நிலையில் நாட்டை ஏற்று முன்னேற்றக்கூடிய ஒரே தலைமை ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என்றும் தெரிவித்தனர். 

அத்துடன் கட்சி அரசியலுக்கு அப்பால் அவரை ஆதரிப்பதே உகந்தது எனவும் தெரிவித்த அவர்கள், கட்சித் தலைமையும் தனது முடிவை மாற்றி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவு வழங்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர்.

புத்தளம் – மன்னார் வீதியை திறப்பது உட்பட வடக்கு முஸ்லிம்களுடன் தொடர்புள்ள பல பிரச்சினைகளை தாம் ஜனாதிபதிக்கு முன்வைத்ததாகவும் அவற்றுக்கு ஜனாதிபதி சாதகமான பதில் வழங்கியதாகவும் மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதேவேளை, பொதுஜன பெரமுன ஆதரவு வழங்கிய சுயேட்சைக் குழு நகர சபை முன்னாள் மேயர் மஸாஹிம் மொஹமட் மற்றும் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்திய வத்தளை – மாபோல நகரசபை முன்னாள் மேயர் ஏ.எச்.எம். நௌசாத் உட்பட ஐக்கிய மக்கள் சக்தி அமைப்பாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முன்வந்துள்ளனர். ஜனாதிபதியின் வெற்றிக்காக அர்ப்பணிப்பதாக அவர்கள் அறிவித்தனர்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம். முஷர்ரப், ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் ராஜித சேனாரத்ன மற்றும் களுத்துறை நகரசபை முன்னாள் மேயர் ஆமிர் நாஸிர் ஆகியோரும் இந்த சந்திப்புகளில் இணைந்துகொண்டனர்.

Related posts

போதைப் பொருட்களை அழிக்குமாறு உத்தரவு..

பேருந்து கட்டணத்தை குறைக்க முடியாது…

சிறைக் கைதிகளை பார்வையிட மீண்டும் அனுமதி