அரசியல்உள்நாடு

அனுரவின் உடல்நலம் பாதிப்பு – ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் வேண்டுகோள்

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க உடல்களைப்பு காரணமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால் மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர் என ஜேவிபியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

உடல்நிலை சரியில்லாததால் மாத்தறையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் அனுரகுமாரதிசநாயக்க கலந்துகொள்ளவில்லை என டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

அனுரகுமார உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளார், கடந்த சில நாட்களாக அவர் ஓய்வின்றி பிரச்சாரத்தில் ஈடுபட்டார், அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார் இதன்காரணமாக மருத்துவர்கள் அவரை ஓய்வெடுக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்,என டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Related posts

மின் கட்டணங்களுக்கு அரசாங்கம் வழங்கும் சலுகை

புதிய புற்களை தேடி வரும் யானை கூட்டம்!

தேர்தல் தொடர்பில் இன்று தீர்மானமிக்க கலந்துரையாடல்