அரசியல்உள்நாடு

குணமானவரை மீண்டும் நோயாளியாக்க இடமளிக்க முடியாது – ஜனாதிபதி ரணில்

ஆயுர்வேதத்தை மருத்துவ விஞ்ஞானமாக அங்கீகரிப்பதே தனது நோக்கமாகும் எனவும், அதற்காகவே ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை ஸ்தாபிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

ஐந்தாண்டு திட்டத்தின் மூலம் ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய உள்நாட்டு மருத்துவத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த ஜனாதிபதி, நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஆயுர்வேதத்தை அதிகபட்சமாக பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் வலியுறுத்தினார். 

பத்தரமுல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்டலில் நேற்று (06) முற்பகல் நடைபெற்ற உள்நாட்டு வைத்தியர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்தார். 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் பாரம்பரிய, ஆயுர்வேத, சித்த, யூனானி, ஹோமியோபதி வைத்தியர்கள், உள்நாட்டு மருந்து உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள்,  வர்த்தகர்கள் மற்றும் உள்நாட்டு மருத்துவத் துறையினர் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தனர்.

உள்நாட்டு மருத்துவத்துறையின் முன்னேற்றத்திற்கான யோசனையும் இதன்போது ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,

“2022 ஆம் ஆண்டு சிகிச்சைக்காக என்னிடம் ஒப்படைக்கப்பட்ட நோயாளி தற்போது எழுந்து நடக்கிறார்.

குணமடைந்த நபரை மீண்டும் நோளாளியாக்குவதற்கு தகுதியற்ற வைத்தியர்கள் தயாராக உள்ளனர். அவர்களில் பிரயோசனமற்ற மருந்தை அவர் குடித்தால், அந்த நோயாளியை மீண்டும் குணப்படுத்த முடியாது.

அதனால் அந்த மருந்தை குடிப்பதா இல்லையா என்பதை குணமடைந்த நபரே  தீர்மானிக்க வேண்டும். எவ்வாறாயினும் நோயாளியை மேலும் கஷ்டத்தில் தள்ளிவிடாமல் காப்பாற்ற வேண்டும் என்தே எமது நோக்கமாகும். 

ஒரு நாட்டு இப்படி ஒரு நோய் வருவது நல்லதல்ல. என்னிடம் ஒப்படைக்கப்பட்ட  நோயாளிக்கு சிகிச்சை அளிக்க வெளியில் இருந்தும் சில வைத்தியர்களை  வரவழைக்க வேண்டியிருந்தது.

வொஷிங்டன், டோக்கியோ உள்ளிட்ட 18 நாடுகளில் இருந்து மருத்துவர்களை அழைத்து வந்தோம். இப்போது புதிய வைத்தியர் ஒருவர் வந்திருக்கிறார்.

அவர் தரப்போவதாகச் சொல்லும் மருந்துகளை பார்க்கும்போது பயமாய் இருக்கிறது. அது குறித்து முழுநாடும் தீர்மானம் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

இந்த மாநாட்டில் பல கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டதோடு அவற்றை செயல்படுத்துவது குறித்து ஆலோசிகிறோம். உள்நாட்டு மருத்துவ முறைகளைப் பாதுகாத்து மேம்படுத்த வேண்டும்.

ஜே.ஆர். ஜயவர்த்தனவின் காலத்தில் டபிள்யூ.ஜே.பெர்னாண்டோ தலைமையில் சுதேச மருத்துவம் தொடர்பான முதலாவது குழு அறிக்கை தயாரிக்கப்பட்டது. அதன் பின்னர் அவ்வாறான அறிக்கைகள் எவையும் வரவில்லை.

உள்நாட்டு மருத்துவ முறையில் பாரம்பரிய மருத்துவர்களும், ஆயுர்வேத பீடத்தில் பட்டம் பெற்றவர்களும் உள்ளனர். கடந்த காலங்களில், சுதேச மருத்துவம் மிகவும் வெற்றிகரமாக இருந்தது.

அதற்கான மதிப்பும் கிடைத்தது. இந்த சுகாதார முறமைகள் இலங்கையிலும் தெற்காசிய நாடுகள் முழுவதிலும் 1000,2000 ஆண்டுகள் பரலாக காணப்பட்டது.

இப்போது இந்தியா உள்நாட்டு மருத்துவம் குறித்து அதிகளவில் ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. இலங்கையில் அது நடக்கவில்லை. எனவே உள்நாட்டு மருத்துவம் தொடர்பிலான ஆய்வுகளும், அதன் வரலாறுகள் தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொண்டு இந்த துறையை மேலும் முன்னோக்கி கொண்டுச் செல்வோம். 

இதற்காக பாரம்பரிய வைத்தியர்களையும் ஒன்றிணைக்க வேண்டும். அவர்களுக்கும் அங்கீகாரம் வழங்க வேண்டும். அதே சமயம் ஜோதிடத்தையும் இதனுடன் இணைக்க வேண்டும்.

இவை அனைத்தும் பின்னிப் பிணைந்தவை. இவற்றை பிரிக்க முடியாது. அதற்கு அமைவாக புதிய கட்டமைப்பைத் உருவாக்க வேண்டும். இந்தத் துறைகள் அனைத்தையும் அங்கீகரித்து அவற்றைப் பதிவு செய்ய புதிய சடடமொன்றை கொண்டு வர எதிர்பார்க்கிறோம்.

இந்தப் பணிகளை முன்னெடுக்க ஆயுர்வேதத் திணைக்களம் மாத்திரம் போதாது. ஆயுர்வேதம் தொடர்பான தேசிய சபையொன்றை நிறுவுவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து  வருகிறோம். இந்தத் துறையின் முன்னேற்றத்திற்காக நீண்ட காலத் திட்டங்களையும் ஐந்தாண்டுத் திட்டத்தையும் வகுக்க எதிர்பார்க்கிறோம்.

அதற்கேற்ப, சுதேச வைத்தியத் முறையின் மறுசீரமைப்பு குறித்து புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது.  அனைத்துப் பிரிவினரையும் ஒன்றிணைத்து இருக்கும்  வளங்களைப் பயன்படுத்தி  இவ்வாறான செயற்பாடுகளை ஆரம்பித்து முன்னோக்கிக் கொண்டு செல்வோம்.

ஆயுர்வேத மருத்துவத்திற்கு, மருத்துவ அறிவியலாக அங்கீகரிப்பை பெற்றுக்கொடுப்பதே எனது நோக்கம். அதன்படி, இந்த மருத்துவ முறைகளைத் தேடி சுற்றுலாப் பயணிகள் நம் நாட்டிற்கு வருகிறார்கள். இது இந்தியாவில் செயற்படுகிறது. அந்த  முறையை நாமும் பின்பற்ற வேண்டும்.  

நமது  சுதேசவைத்திய முறையின் அறிவியல் அடிப்படையைக் கண்டறிந்து செயற்படுவது மிகவும் முக்கியம். அதற்காக ஆராய்ச்சிகள் அவசியம். மேலும், சுற்றுலாத்துறைக்காக இத்துறை, நவீனமயமாக்கப்பட்டு பங்களிப்புகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தாய்லாந்து போன்ற நாடுகளில் உள்ள ஒரு பாரிய ஹோட்டலுக்குச் செல்லும்போது, அங்கு ஆயுர்வேத சிகிச்சையைப் பெறலாம். இதே திட்டத்தை நாமும் எதிர்காலத்தில் செயல்படுத்த வேண்டும்.

எனவே, சுற்றுலாத் துறையில் ஆயுர்வேத மருத்துவம் சேர்க்கப்பட வேண்டும். இது அதிக அந்நியச் செலாவணியை ஈட்ட நமக்கு உதவுகிறது. இன்று சென்னை போன்ற நாடுகளில் ஜோதிட முறையும் உருவாகியுள்ளது. இந்த மரபுகள் அனைத்தையும் இணைத்து இந்தத் துறையை நாம் முன்னேற்ற வேண்டும்.

எனவே ஆயுர்வேத தேசிய சபையை எவ்வாறு நிறுவுவது என்பது குறித்து எங்களுக்கு ஆலோசனை தேவை. அனைவரும் ஒன்றிணைந்து செயற்படும் வகையில் இந்த சபையை நிறுவுவது அவசியமாகும்” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பின்னணியில் போதைப்பொருள் வியாபாரிகள்

அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு

🔴 BREAKING : புதிய பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமனம்