மின்சாரம் மற்றும் எரிபொருள் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளையும் அத்தியாவசிய சேவைகளாக வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் (Ranil Wickremesinghe) நேற்றையதினம் (05) குறித்த விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இதன் படி, 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் பிரிவு 2 இன் கீழ் வெளியிடப்பட்ட குறித்த வர்த்தமானி மின்சாரம், பெட்ரோலிய பொருட்கள் மற்றும் எரிபொருளின் வழங்கல் மற்றும் விநியோகத்தை அத்தியாவசிய பொது சேவைகளாக குறிப்பிட்டுள்ளது.