அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தல் – இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை (ஜூலை மாதம் 31 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை) 2,098 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 754 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1,266 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதேவேளை, மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 14 முறைப்பாடுகளும் ஏனைய விடயங்கள் தொடர்பில் 64 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

Related posts

சுமந்திரன், சாணக்கியனின் துணிச்சலான முடிவு வரவேற்கத்தக்கது – திகாம்பரம் எம்.பி

editor

பல்லேகம ஸ்ரீநிவாச தேரர் காலமானார்

“சமூக இருப்புக்கான பலமுள்ள அடித்தளம் எமது மக்களின் ஒற்றுமையில் தங்கியுள்ளது”