அரசியல்உள்நாடு

ஒரு வீரனைப் போல இந்த நாட்டை ரணில் பொறுப்பேற்றார் – மஹிந்த அமரவீர

ரணில் விக்கிரமசிங்க இந்த நாட்டின் நெருக்கடியான நேரத்தில் பொறுப்பேற்றார், எனவே நாங்கள் இன்று அவருக்கு ஆதரவளிக்கிறோம். அன்று மக்கள் வரிசையில் நின்று இறந்தனர்.

அப்போது நாட்டைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஒரு வீரனைப் போல ஏற்றுக்கொண்டாரென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு தெரிவித்தார்.

மேலும், ”ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் எங்களுடைய ஆதரவையும் அவர் கேட்டுக்கொண்டார். விவசாயிகளை மீண்டும் விவசாய நிலங்களுக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் உரங்களை இறக்குமதி செய்து விவசாயிகளுக்கு வழங்கினோம். அதனைத் தடுக்க ஜே.வி.பி என்ன தடைகளை ஏற்படுத்தினாலும் மக்களுக்கு உர மானியம் வழங்குவதை நாங்கள் நிறுத்தவில்லை.

அரசின் விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தால், இன்று நாட்டில் அரிசி கூட உற்பத்தியாகியுள்ளது. நமது எதிர்கால அரசாங்கத்தின் கீழ், அரிசியை ஏற்றுமதி செய்வதன் மூலம் விவசாயிகளின் பொருளாதாரம் உயர்த்தப்படும்.

விவசாய நவீனமயமாக்கல் திட்டத்தின் மூலம், இளைஞர்கள் எதிர்காலத்தில் மூன்று முதல் நான்கு இலட்சம் பெறும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்படும். சர்வதேச சந்தையை இலக்காக கொண்டு அரிசி உற்பத்தியை அதிகரிக்க, அடுத்த பருவத்தில் இருந்து ஒரு மூட்டை உரம் நான்காயிரம் ரூபாவிற்கு வழங்க ஏற்கனவே பணம் ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், அனைத்து விவசாயிகளுக்கும் இலவச உரம் வழங்குவதற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே தயாரித்துள்ளன. ரணில் விக்கிரமசிங்க தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு பங்களித்தார்.

மீண்டும், பரிசோதனை செய்ய எங்களுக்கு நேரம் இல்லை. இந்த நாட்டை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டத்தை வெற்றி கொள்ள வேண்டிய பொறுப்பு எம்மிடம் உள்ளது.”என அவர் கருத்து தெரிவித்தார்.

மேலும் இந்த மக்கள் சந்திப்பில் சுகாதார மற்றும் கைத்தொழில் அமைச்சர் டொக்டர் ரமேஷ் பத்திரன, பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார, முன்னாள் அமைச்சர் பைசர் முஸ்தபா ஆகியோரும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்

Related posts

மூன்று மணி நேர சுழற்சி முறையில் மின்வெட்டு

பொலிஸ் அதிகாரிகள் மைத்திரி இல்லத்திற்கு

நாட்டை மூடிவைப்பதால் மட்டும் நோய்த்தொற்றை ஒழிக்க முடியாது