அரசியல்உள்நாடு

அலி சாஹிர் மெளலானாவை SLMC யில் இருந்து நீக்க இடைக்காலத் தடை

அலி சாஹிர் மௌலானாவை முஸ்லிம் காங்கிரசில் இருந்து நீக்க முடியாது என கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (28) இடைக்கால தடையுத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்திருந்தார். நாட்டின் எதிர்காலம் கருதி தாம் இந்த முடிவை எடுத்ததாக அறிவித்திருந்தார்.

ஆனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சமூகத்துக்காக நாங்கள் சஜித்தோடு சேர்ந்துள்ளோம் என்று அதற்கு முன்னரே அறிவித்திருந்தது.

எவ்வாறாயினும் கட்சியின் முடிவை மீறியதாக தெரிவித்து அலி சாஹிர் மௌலானாவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என முஸ்லிம் காங்கிரஸ் அறிவித்திருந்தது.

இந்நிலையில் இது தொடர்பில் விளக்கம் கொடுக்க அலி சாஹிர் மௌலானாவுக்கு 01 வார கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அது தொடர்பான கடிதம் கடந்த 21 ஆம் திகதி பதிவுத் தபால் மூலம் மௌலானா தரப்புக்கு கிடைத்துள்ளது.

அந்த ஒரு வார காலம் இன்று இரவு 12 மணி வரையில் இருந்தாலும் இன்றைய தினமே முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடம் கிழக்குப் பகுதியில் ஒரு இடத்தில் ஒன்று கூடி அலி சாஹிர் மௌலானாவை கட்சியில் இருந்து நீக்க நடவடிக்கைகளை எடுத்திருந்ததாக கூறப்படுகின்றது.

எவ்வாறாயினும் அலி சாஹிர் மௌலானாவை கட்சியின் பதவியில் இருந்து நீக்க முடியாது என்றும் அவருடைய அங்கத்துவத்தை நீக்க முடியாது என்றும் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இடைக்கால தடையுத்தரவை பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக அலி சாஹிர் மௌலானா தரப்பின் முறைப்பாட்டின் மூலம் இந்த உத்தரவு பெறப்பட்டுள்ளது

Related posts

மேலும் 12 கிராம சேவகர் பிரிவுகள் முடக்கம்

எரிபொருள் ஒதுக்கீடு இன்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு

மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிப்பு