அரசியல்உள்நாடு

ஐ.ம சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன்  இணைவார்கள் – மனுஷ

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றியின் பின் ஐக்கிய மக்கள் சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன் இணைவார்கள்.

எனவே சஜித் பிரேமதாச தேர்தலில் போட்டியிடுவதை மீள்பரிசீலிப்பாரா என்பது எமக்குத் தெரியவில்லை.

அதற்குள் பாரளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சியின் ஏனைய உறுப்பினர்களும் வெளியேறி விடுவார்கள் என  தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

வியாழக்கிழமை (22) இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஷின் பதவியேற்பு நிகழ்வின் கலந்து கொண்ட போது  இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாராளுமன்றத்தில் தலதா அத்துகோரள ஆற்றிய உரையானது சமகி ஐக்கிய மக்கள் சக்தியின் அடிமட்ட உறுப்பினர்கள் மத்தியில்  எதிரொலிக்கும் அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின்  தலைவரைச் சுற்றி திரளுவதற்கு அவர்களைத் தூண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கிராம மட்ட உறுப்பினர்கள் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியின் அங்கத்தவர்கள். ஆகவே தமது தலைவர் நாட்டைக் கட்டியெழுப்பும் நோக்கில் திட்டமிட்டு செயற்படுகின்றதால், தங்களது  ஆதரவை அவருக்கு வழங்க மக்கள்  தயாராக உள்ளனர்.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி, தேவையான அறிவுறுத்தல்களையும் வழிகாட்டுதல்களையும் தொழில் அமைச்சுக்கு  வழங்கிவருகின்றார். எனவே, திட்டமிட்டபடி அமைச்சின் அனைத்து பணிகளும்  தொடரும்.

தொழில்  இராஜாங்க அமைச்சர் என்ற வகையில்  வடிவேல் சுரேஷ் தொழிலாளர் துறை, முறைசாரா தொழிற்துறை தொழிலாளர்களின் ஓய்வூதியம், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம்  தொடர்பான பிரச்சனைகளையும் முன்னெடுத்தது வருகின்றார்.

பாராளுமன்றத்தில் தலதா அத்துகோரல ஆற்றிய உரையில் சஜித் பிரேமதாசவின் அனுபவமின்மை, ஜனாதிபதியாக வருவதற்கான அவரது பொறுமையின்மை மற்றும் பொறுப்புகள் அவருக்கு வழங்கப்பட்டபோது அதனை ஏற்க மறுத்தமை  பற்றிய விடயங்களை நாம் முன்னேரே கூறிவிட்டோம் .

தலதாவின் பாராளுமன்ற விசேட உரையின் பின்னர்  சஜித் பிரேமதாச தலைமை தாங்கும் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியை பற்றி சிந்திக்கத் தூண்டுகிறது.

எதிகட்ச்சித்தலைவரிடம் முறையான அபிவிருத்தி  வேலைத்திட்டம் எதுவும் இல்லை அவர் எல்லோரையும் சமநிலைப்படுத்த  முயல்கிறார். அரசியல் அதிகாரத்தைப் பெறுவதற்காக எதையும் செய்யும் ஒருவராக சஜித்தை நாம் அறிந்து கொண்டோம்.

அதிகாரத்திற்காக எதையும் செய்யும் தலைவர்கள் எங்களுக்கு தேவை இல்லை. மாறாக நாட்டையும் அதன் எதிர்காலத்திற்காக முன்னோக்கி நகர்த்துவதற்கு தேவையான அனைத்தையும் செய்யும் தலைவர் ஒருவரே எமக்குத் தேவைப்படுகின்றார்.

எதிர்வரும் 21ஆம் திகதி  தேர்தலில், சிலர் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டதாக  நம்புகின்றனர். எது எவ்வாறாயினும் 21ஆம் திகதி எமது வெற்றியை உறுதி செய்வோம்.

எமது வெற்றியின் பின் ஐக்கிய மக்கள் சக்தியின் பாரளுமன்ற உறுப்பினர்கள் எம்முடன்  இணைவார்கள். இந்நிலையில் சஜித் பிரேமதாச  தேர்தலில் போட்டியிடுவதை மீள்பரிசீலிப்பாரா என்பது எமக்குத் தெரியவில்லை. அதற்குள் பாரளுமன்ற உறுப்பினர்களுடன் கட்சியின் ஏனைய  உறுப்பினர்களும் வெளியேறி விடுவார்கள் என  தெரிவித்தார்.

Related posts

ரணிலின் அழைப்பை ஏற்ற தமிழ் கூட்டமைப்பு!

நுரைச்சோலையில் பழுதடைந்த ஜெனரேட்டர் திங்கள் முதல் வழமைக்கு

ஒரு இலட்சம் குடும்பங்களுக்கு தொழில் வாய்ப்பு