உலகம்

இந்தியாவினால் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த முடியும்: இமானுவல் மேக்ரான் நம்பிக்கை

திர்வரும் ஒலிம்பிக் போட்டிகளை நடத்தும் திறன் இந்தியாவுக்கு உள்ளது என தான் உறுதியாக நம்புவதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2036ஆம் ஆண்டில் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த இந்தியா ஆர்வம் காட்டிவருகின்ற நிலையில், எகிப்து முதலான பல நாடுகள், 2036இல் ஒலிம்பிக் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்துள்ளன.

இந்திய ஊடகம் ஒன்றிற்கு கருத்து தெரிவித்த போதெ அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் ஊடகத்திற்கு தெரிவித்ததாவது,

“உங்கள் நாட்டின் மீது எனக்கு உறுதியான நம்பிக்கை உள்ளது, உங்களால் ஒலிம்பிக் போன்ற நிகழ்ச்சிகளை திறம்பட நடத்த முடியும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

மேலும், இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒலிம்பிக் போட்டிகள் தொடர்புடைய தொழில்நுட்பக் குழு ஒன்றை இந்தியாவுக்கு அனுப்புமாறு தன்னிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

எங்கள் ஒலிம்பிக் ஆயத்தக் குழுவிலும் சில இந்தியர்கள் இருக்கிறார்கள், எங்களால் இந்தியாவுக்கு உதவமுடியுமானால் அதனால் எங்களுக்கும் பெரும் மகிழ்ச்சி”என இமானுவல் மேக்ரான் கூறியுள்ளார். 

Related posts

அமெரிக்காவின் முன்னாள் வெளிவிவகார செயலாளர் ஹென்றி ஹிசிஞ்சர் காலமானார்!

வியன்னாவில் 6 இடங்களில் தாக்குதல் – மூவர் பலி

டிரம்பின் குற்றச்சாட்டை மறுத்த தேர்தல் அதிகாரி நீக்கம்