அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணைக்குழுவின் அவசர அழைப்பு.

பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் தேர்தலுக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோர் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடுவதற்காக இன்று (31) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அவர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனைக் குறிப்பிட்டார்.

“பொலிஸ் மா அதிபரை நியமிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் இல்லை.

அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதற்கு அதிகாரம் உள்ள ஜனாதிபதியிடம் கோரவே முடியும்.

அதன்படி, ஜனாதிபதி செயலாளரிடம் அந்த கோரிக்கையை விடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று தீர்மானித்தது.

பொலிஸ் மா அதிபர் அல்லது பதில் பொலிஸ் மா அதிபரை நியமிக்குமாறு ஜனாதிபதி செயலாளரிடம் நேற்று காலை கோரிக்கை விடுத்தோம்.

அதன்படி நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலாளரிடமிருந்து எமக்கு பதில் கிடைத்துள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவின்படி, ஜனாதிபதியின் செயலாளரினால் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக ஜனாதிபதி தேர்தலின் பாதுகாப்புக்கு தேவையான சகல பொலிஸ் உத்தியோகத்தர்களையும் வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பொது மக்கள்  பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும், தேர்தலுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபரையும் அழைத்து இது குறித்து இன்று கலந்துரையாட எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.

Related posts

“சேனாதிபதி 200 பேரை மிரிஹான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுத்தினார்”

வடக்கு ரயில் சேவைகள் வழமைக்கு

சிறையில் வாடும் ஞானசார தேரருக்கான விதிமுறைகள்!!