அரசியல்உள்நாடு

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நீதிமன்றில் முன்னிலையான ஜீவன்

பலத்த பொலிஸ் பாதுகாப்புடன் நீதிமன்றில் ஆஜராகியிருந்த அமைச்சர் ஜீவன் தொண்டமானை சந்தேக நபராக ஏற்றுக்கொள்ளாது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு நீதிமன்றில் உண்மைகளை முன்வைக்குமாறு நுவரெலியா மாவட்ட நீதவான் பொலிஸாருக்கு இன்று (29) உத்தரவிட்டார்.

30.05.2024 கெளனி வெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட பீட்ரூ தோட்ட தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறி 01.06. 2024 ஆம் திகதி நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் பீட்ரூ தோட்ட நிர்வாகத்தினரால் முறைப்பாடு அளிக்கப்பட்டிருந்தது.

அம் முறைப்பாடு தொடர்பாக 22. 7. 2024 ஆம் திகதி நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தின் முதலாவது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இவ்வழக்கானது நுவரெலியா மாவட்ட பதில் நீதவான் ஜயமினி அம்பகஹவத்த  முன்னிலையில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது இவ்வழக்கின் சந்தேக நபர்களை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நுவரெலியா பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து நிர்வாகத்தின் சார்பாக வழக்கில் முன்னிலை ஆகியிருந்த சட்டத்தரணிகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வழக்கின் பிரதான சந்தேக நபர்களாக அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்டோர் காணப்படுவதால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தின் முன்னிலையாகும் படி நீதவான் கூறி இருந்ததாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தனர்.

இதேவேளை, இன்றைய தினம் 29.7.2024 ஆம் திகதி அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட நான்கு பேர் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்திற்கு முன்னிலையாகி இருந்தனர்.  அமைச்சர் ஜீவன் தொண்டமான் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி ஷான் குலதுங்க, சிரேஷ்ட சட்டத்தரணி பெருமாள் ராஜதுரை மற்றும் சிவன்ஜோதி யோகராஜா ஆகியோர்  முன்னிலையாகி இருந்தனர்.

நுவரெலியா நீதிமன்ற நீதிபதி  N.W.K.L பிரபூதிகா லங்காங்தனி முன்னிலையில் அவர் முன்னிலையாகி இருந்தார்.

இருப்பினும் நீதிபதி கூறியதாவது, இவ்வழக்கு தொடர்பில் அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பெயர் எவ்விடத்திலும் பரிந்துரைக்கப்படாத காரணத்தினால் இவ்வழக்கினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதிக்கு நீதவான் உத்தரவிட்டார்.

அன்றைய தினம், இவ்வழக்கினை சரியாக விசாரித்து விசாரணைகள் தொடர்பான உண்மைகளை நீதிமன்றத்தில் தெரிவிக்குமாறு நுவரெலியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அல்லது உதவி பொலிஸ் அத்தியட்சகருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

இலங்கைக்கு சிங்கப்பூர் விதித்த பயணத்தடை நீக்கம்

IMF கடன் வசதி இந்த ஆண்டு இறுதிக்குள் கிடைக்கும்

மின்சாரம் ,நீர் பிரச்சினைகளை உடனடியாக தீர்க்கும் விசேடசெயற்திட்டம்