உள்நாடு

நீதிமன்றம் சென்ற ஹக்கீம், சுமந்திரன், சம்பிக்க

முறைகேடான E- வீசா மோசடியினால் நாட்டின் பாதுகாப்பு, பொருளாதாரம், உல்லாசப் பயணிகள் வருகை போன்றவற்றிக்குப் பாரிய பாதிப்புகள் ஏற்படுவதாகச் சுட்டிக்காட்டி பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், பாட்டலி சம்பிக்க ரணவக்க ஆகியோர் தனித்தனியாகத் தாக்கல் செய்துள்ள வழக்குகள் எதிர்வரும் ஆகஸ்ட்  2 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

நீதியரசர்கள் குழாத்தினர் திங்கட்கிழமை இன்று (29) இதனை அறிவித்தனர்.

இந்த வழக்கைத் தொடுத்துள்ள எம்.பிக்கள் மூவரும்  ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கும்போதே இதனைத் தெரிவித்தனர்.

Related posts

மக்கள் வங்கி ATM களில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை

நாட்டில் 10 இற்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் இரத்து

தபால் மூல வாக்களிப்பு தொடர்பான தகவல்