அரசியல்உள்நாடு

தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோருக்கு விசேட அறிவித்தல்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோருக்குத் தேர்தல்கள் ஆணைக்குழு முக்கிய அறிவித்தல் அடங்கிய ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோர்களின் தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியல் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள், கிராம உத்தியோகத்தர் அலுவலகங்களில் ஜூலை மாதம் 26 ஆம் திகதியிலிருந்து பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

மேற்குறிப்பிட்ட இடங்களுக்கு மேலாக,

⦁ பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு , சுதந்திர சதுக்கம், கொழும்பு 07

⦁ தொழிலாளர் திணைக்களம்  நாராஹேன்பிட்டி கொழும்பு 05

⦁ கல்வி அமைச்சு, இசுருபாய, பத்தரமுல்ல

⦁ பதிவாளர் நாயகம் திணைக்களம், இல.234/A3,டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமுல்ல

⦁ தபால் தலைமையகம் ஆர்.விஜேவர்தன மாவத்தை, கொழும்பு 10

⦁ கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள். அபிவிருத்தி அமைச்சு, மாளிகாவத்தை

தேர்தல் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள www.elections.gov.lk என்ற இணையத்தளத்தின் மூலம் மேலதிக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

தபால் மூலம் வாக்களிக்கவுள்ளோரின் விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட தேர்தல்கள்  அலுவலகத்தின் முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

தபால் மூலம் வாக்களிக்க விரும்புவோர் தேர்தல் வாக்காளர் பெயர் பட்டியல் காட்சிப்படுத்தப்பட்டுள்ள இடங்களில் இருந்து விண்ணப்பங்களை இலவசமாக பொற்றுக்கொள்ள முடியும் அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும்

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பங்களை அந்தந்த மாவட்டத்தின் தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலக அதிகாரியிடம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முன் ஒப்படைக்க வேண்டும்.

தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள்  ஆகஸ்ட் 5 அல்லது  அதற்கு முன்னர் அந்தந்த மாவட்டங்களின் தேர்தல்  அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் – தேர்தல் ஆணைக்குழு

Related posts

வெளிநாடுகளுக்கு பயணிக்கவுள்ளோருக்கான முக்கிய அறிவிப்பு

வடக்கிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு

ரயில்வே திணைக்களத்தின் விசேட அறிவிப்பு