அரசியல்உள்நாடு

நாடு கட்டியெழுப்பப்பட வேண்டுமானால் இனங்கள் மற்றும் மதங்களுக்கிடையிலான ஒற்றுமை மிகவும் முக்கியமானது

ஸ்மார்ட் கல்வி மூலம் ஸ்மார்ட் இளைஞர் தலைமுறையை உருவாக்கி கௌரவமான தாய்நாட்டை உருவாக்குவதே எமது நோக்கமாகும்.

நாட்டின் அபிவிருத்தி, முன்னேற்றம், சௌபாக்கியம் மற்றும் செழிப்புக்கு ஒற்றுமையே முக்கிய காரணியாக அமைந்து காணப்படுகிறது. இனங்களுக்கு இடையே மதங்களுக்கு இடையே ஒற்றுமை இருக்க வேண்டும்.

சகல இன, மதங்களையும் சேர்ந்த மக்கள் அனைவரும் அடிப்படைவாதிகளாக இல்லாமல் நடுத்தர மத்தியஸ்தமான வழியில் நடுநிலை சிந்தனையோடு பயணிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 369 ஆவது கட்டமாக 1177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் மற்றும் அகராதிகள் என்பன கொழும்பு 10, அல்-ஹிதாயா கல்லூரி வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூலை 23 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி நிதியத்திற்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.

ஏனையோரின் மதம், கலாச்சாரம் மற்றும் நடத்தைக்கு உரிய மரியாதை கொடுக்கப்பட வேண்டும். அனைவருக்கும் இங்கு ஓர் இடமுண்டு. அனுவரினதும் உரிமைகளையும் பாதுகாக்க வேண்டும்.

மத்தியஸ்தமான பாதையில் நடந்து அனைவரையும் மதிக்கும், ஒழுக்கமும் நாகரிகமும் கொண்ட நாடு கட்டியமைக்கப்படும் போது நாமனைவரும் வெற்றி பெறுவோம். பேதங்கள் பிரிவினைகளுக்கு இடமளிக்கக் கூடாது. நேர்மையான மனப்போக்கில் நடந்து கொள்ள வேண்டும்.

100 பில்லியன் டொலர் கடன் பெற்றுள்ளோம். இந்த இக்கட்டான பாதையை நாம் ஒன்றாக கடக்க வேண்டும். ஒற்றுமை பலப்படுத்தப்பட வேண்டும். நாம் ஒன்றிணைந்து வளமான நாட்டை உருவாக்க வேண்டும்.

அபிவிருத்தி, முன்னோற்றம் மற்றும் சௌஜன்யத்திற்கு ஒற்றுமையே பிரதான அடித்தளம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இன்று மத்திய கிழக்கு இஸ்ரேல் பிரதேசத்தில் பேரவலம் அரங்கேறிவருகிறது. பாலஸ்தீன மக்களை அழித்தொழிக்கும் அரச பயங்கரவாதத்தை முற்றாக நிராகரிக்கிறேன்.

இந்த இரு நாடுகளும் ஐக்கியப்பட வேண்டும். இந்த பாலஸ்தீன இனப்படுகொலையை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இதற்கு எதிராக இரட்டை நிலைப்பாடு இல்லாமல் பலஸ்தீன விடுதலைக்காக முன்நிற்கிறேன். எதிரகாலத்திலும் இதே நிலைப்பாட்டிலயே இருப்பேன். இரு நாடுகளும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

Related posts

தமிழ் கட்சிகள் உடன்படிக்கையில் கைச்சாத்து

இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம்

MV-Xpress pearl கப்பலை அகற்றும் பணிகள் நவம்பரில்