அரசியல்உள்நாடு

ஜனாதிபதி ரணில் எமது கட்சியை இரண்டாக்கி விட்டார் – இதுதான் எமக்கு கிடைத்த பரிசு – நாமல்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு உதவியதன் மூலம் கட்சியை இரண்டாகப் பிளவுபடுத்தியமையே எமக்குக் கிடைத்த பரிசு என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

கட்சி அலுவலகத்தில் இன்று (25) இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ரணில் விக்கிரமசிங்கவுக்கு நாங்கள் முழு ஆதரவை வழங்கினோம், அவர் எமக்கு ஒத்துக்கொள்ளாத விடயங்களைச் செய்த போதும் இன்று வரை நாங்கள் எதுவும் கூறவில்லை.

ஆனால், கட்சி இரண்டாகப் பிளவுபட்டதுதான் நமக்குக் கிடைத்த பரிசு.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உடைத்தது. நல்லாட்சி அரசாங்கத்தை உடைத்தது. மக்கள் விடுதலை முன்னணியை உடைத்தது. விடுதலைப் புலிகள் அமைப்பையும் உடைத்தார்.  இதுதான் அவரது வழக்கம் என்றார்.

Related posts

“பெற்றோர் மீது தேவையற்ற சுமை இல்லை” – கல்வி அமைச்சு

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய மேலும் 123 பேர் கைது

கோழி மற்றும் முட்டை விலை மீண்டும் உயரும் சாத்தியம்