விளையாட்டு

பயிற்சியின் போது காயம் – நுவான் துஷாராவும் விலகினார்.

நேற்றிரவு (24) பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் உபாதையால் இலங்கை கிரிக்கெட் அணியின் வேக பந்து வீச்சாளர் நுவான் துஷாரா, இந்திய தொடரில் இருந்து விலகியுள்ளார்.

அவரது விரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, நுவான் துஷாரவிற்கு பதிலாக டில்ஷான் மதுஷங்க அணியில் இணைந்துள்ளார்.

அதேநேரம் உபாதை காரணமாக அணியில் இருந்து நீக்கப்படுள்ள துஷ்மந்த சமீரவுக்கு பதிலாக அசித பெர்னாண்டோவும் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

Related posts

222 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுக்களையும் இழந்தது இலங்கை

டெஸ்ட் பந்து வீச்சாளர் தரிவரிசை பட்டியலில் அஸ்வின் முன்னேற்றம்

இலங்கை அணியின் புதிய தலைவர் தெரிவு