அரசியல்உள்நாடு

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்குவதாக சரத் பொன்சேகா அறிவிப்பு.

2024 ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறங்குவதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தமது உத்தியோகபூர்வ X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

76 வருடங்களாக பல்வேறு அரசியல் கட்சிகளும் நாட்டை வங்குரோத்து நிலைமைக்கு இட்டுச்சென்றதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஊழலற்ற நாட்டை கட்டியெழுப்புவதற்கான தேவையுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், தமது X தளத்தில் #CrushCorruption எனும் ஹேஷ்டேக்கையும் பதிவிட்டுள்ளார்.

நாட்டின் வருமானத்தை அதிகரிப்பதற்காக இயற்கை வளங்களை பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையை முன்னேற்றுவதற்கு தம்முடன் இணைந்து கொள்ளுமாறு சரத் பொன்சேகா நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

Related posts

தாக்குதல் நடத்தப்படலாம் – மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்தில் விசேட சோதனை

editor

மேலும் 65 பேர் பூரண குணம்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு