அரசியல்உள்நாடு

தமிழ், முஸ்லிம் கட்சிகள் இணையப் போகிறது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையிலான ‘ ஐக்கிய மக்கள் முன்னணி’ என்ற அமைப்பு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி அறிமுகம் செய்யப்படவுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (23) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே ரஞ்சித் மத்துமபண்டார மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது:

ஜனாதிபதி தேர்தல் இந்த வாரத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தேர்தல் சட்டத்தின்படி அடுத்த மாதம் வேட்புமனுக்கள் ஏற்கப்பட வேண்டும். ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் இறுதியில் நடத்தப்பட வேண்டும்.

அத்துடன் பாராளுமன்றத்தில் அதிக பிரதிநிதிகளைக் கொண்ட கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிடவுள்ளது.

சிங்களம், தமிழ், முஸ்லிம், பறங்கியர் என அனைத்துக் குழுக்களும் இணைந்தே ஐக்கிய மக்கள் முன்னணியை உருவாக்குகின்றன.

இதன்படி ஆகஸ்ட் 8 ஆம் திகதி இந்த முன்னணி உருவாகிறது.

ஒன்றிணைந்த மக்கள் சக்தியைக் கட்டியெழுப்பும் கூட்டணிக்காக ஊழலற்ற அனுபவமிக்க தலைவர்கள் மற்றும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் அடங்கிய பெரும் குழு ஒன்றும்  இணையப் போகிறது என்றார்.

Related posts

நேற்று இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களில் 9 பேர் கடற்படையினர்

மத்திய வங்கியின் ஆளுநரின் பதவிக் காலம் நீடிக்குமா?

இன்றே UTV NEWS ALERT இனை செயற்படுத்த..