உள்நாடு

கிளப் வசந்த கொலை – 6 பேருக்கு விளக்கமறியல்

க்ளப் வசந்த என்றழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேரா மற்றும் பலர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் 6 பேர் எதிர்வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள்  இன்று திங்கட்கிழமை (22) காலை கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான பச்சை குத்தும் நிலைய உரிமையாளரிடம் இன்றைய தினம் பிற்பகல் நீதிமன்றத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்படவுள்ளது.

கடந்த ஜூலை மாதம் 8ஆம் திகதி அத்துருகிரிய சந்தியில் பச்சை குத்தும் நிலைய திறப்பு விழாவில்  மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் க்ளப் வசந்த மற்றும் நயன வசுல விஜேசூரிய என்ற 37 வயதான நபர் ஆகியோர் உயிரிழந்தனர்.

துப்பாக்கி பிரயோகத்தில் பாடகி கே.சுஜீவா மற்றும் க்ளப் வசந்தவின் மனைவி உள்ளிட்ட நால்வர் காயமடைந்தனர்.

Related posts

பாணகமுவ அந்நூர் மத்திய கல்லூரி பரீட்சையில் சாதனை

ஊரடங்கு : இன்று தீர்மானிக்கப்படும்

‘உரு ஜுவா’ இனது சகா கைது