அரசியல்

உள்ளுர் வளங்களை விற்காத ஒருவரே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் – நாமல்

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது தொழிலதிபர் தம்மிக்க பெரேராவோ அல்லது வேறு எவருமோ கட்சிக்கு எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் யார் போட்டியிடுவது என்பது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே நாமல் ராஜக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சரியான நேரத்தில் வேட்பாளர் நியமிக்கப்படுவார் என்றும் நாட்டின் கடனை அடைக்க உள்ளுர் வளங்களை விற்காத ஒருவரே ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் என்றும் நாமல் ராஜபக்க்ஷ தெரிவித்தார்.

வேட்பாளர்களை எதிர்பார்த்து பலர் கட்சியுடன் கலந்துரையாடி வருவதாகவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Related posts

டயனா வழக்கின் சாட்சியாளர்களுக்கு அழைப்பு

editor

கோட்டாபய – பகுதி 2 ஆக மாறிவிட்டாரா ஜனாதிபதி அநுர ? ஹர்ஷண ராஜகருணா கேள்வி

editor

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேர்தல் விஞ்ஞாபனம் அடுத்த மாதம்

editor