சூடான செய்திகள் 1

23ம் திகதியின் பின் புதிய அரசியல் நடவடிக்கைகள் ஆரம்பம்-லக்‌ஷ்மன் யாப்பா

(UTV|COLOMBO)-எதிர்வரும் 23ம் திகதியின் பின்னர் தமது புதிய அரசியல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் நேற்று இரவு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் வீட்டில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கலந்துரையாடலின் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன இந்த விடயத்தை ஊடகங்களிடம் கூறினார்.

அடுத்துவரும் காலங்களில் தாம் எவ்வாறு செயற்படுவது என்பது தொடர்பில் இதன்போது கலந்துரையாடியதாக லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் குழுவாக எதிர்க்கட்சியின் பொறுப்புக்களை நிறைவேற்ற எதிர்பார்ப்பதாக லக்‌ஷ்மன் யாப்பா அபேவர்தன கூறினார்.

Related posts

கொரோனா வைரஸ் – மேலும்  23 பேர் பூரண குணமடைந்தனர்

அப்துல் ராசிகிற்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

83 ஆயிரம் லீட்டர் கள்ளுடன் ஒருவர் கைது