உள்நாடு

2025 முதல் நடைமுறைக்கு வரும் இ-கடவுச்சீட்டு

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் இ-கடவுச்சீட்டுகளுக்கு விண்ணப்பிப்பதற்கான புதிய வழிமுறையை இன்று (17) அறிவித்துள்ளது.

அதற்கமைய இத் திட்டம் எதிர்வரும் ஜனவரி 2025 முதல் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதற்கமைய 2024.07.16ஆம் திகதி முதல் இலங்கை கடவுச்சீட்டுக்களுக்கு விண்ணப்பிப்பதற்கு இ-கடவுச்சீட்டுகளுக்கு https://www.immigration.gov.lk என்ற இணைப்பினூடாக முன்கூட்டியே பதிவுசெய்தல் வேண்டும்.

2024.07.16 ஆம் திகதி பதிவு செய்யும் விண்ணப்பதாரிகளுக்கு இந்த முறை 2024.07.19 ஆம் திகதி வெள்ளிக்கிழமையிலிருந்து ஆரம்பமாகும்.

எனவே 2024.07.18ஆம் திகதி வியாழக்கிழமை வரை தற்போதுள்ள முறை நடைமுறையில் இருக்கும்.

குடிவரவுத் திணைக்களம் பதிவு செய்ததன் பின்னர் கடவுச்சீட்டுகளைப் பெறுவதற்கான வாய்ப்பு முன்னுரிமை அடிப்படையில் பெறப்படும் என்றும் இது சாதாரண மற்றும் ஒரு நாள் சேவைகளுக்குக் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

குடிவரவு மற்றும் குடியேற்றத் திணைக்களத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட இ-கடச்சீட்டுகளுக்கான புதிய வழிமுறை கீழ்வரும் படத்தில் வழங்கப்பட்டுள்ளது.

Related posts

ஹிருணிகாவின் பிணை மனுவின் விசாரணை ஜூலை 4 ஆம் திகதி

ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளக் கொடுப்பனவு சட்டத்தில் திருத்தம்

நாட்டில் வெற்றிடமாகவுள்ள முக்கிய பதவிகள்!