விளையாட்டு

எந்தவொரு மனிதனுக்கும் கடினமான நேரங்கள் வரலாம் – வனிந்து ஹசரங்க.

தம்மீது வீசப்படும் சவால்களை எதிர்கொண்டு எதிர்காலத்திலும் அணிக்காக விளையாட எதிர்ப்பார்த்துள்ளதாக கண்டி அணித்தலைவர் வனிந்து ஹசரங்க தெரிவித்துள்ளார்.

தம்புள்ளை சிக்ஸர் அணிக்கு எதிரான போட்டியின் பின்னர் நேற்று (15) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

“எந்தவொரு விளையாட்டு வீரருக்கும், எந்த மனிதனுக்கும் அவர்களின் வாழ்க்கையில் கடினமான நேரங்கள் வரலாம்.

நான் அவர்களை ஒவ்வொன்றாக எதிர்கொள்கிறேன். என்னால் என்ன செய்ய முடியும் என்று எனக்குத் தெரியும். நான் என்ன செய்தேன் என்று எனக்குத் தெரியும்.

ஒரு வீரராக, வெளியே இருந்து வரும் சவால்களை எனது விளையாட்டை பாதிக்காத வகையில் எனது விளையாட்டின் மூலம் செய்யக்கூடியதை செய்வேன்.

கடந்த ஆண்டு போட்டியின் நாயகனாக நான் இருந்தேன். இந்த வருடம் பிரகாசிக்காமைக்கு வருத்தப்படுகிறேன்.

கடந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. எதிர்வரும் போட்டிகளுக்கு இது முக்கியமானதாக இருக்கும்” என்றார்.

Related posts

டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் கோலி முன்னேற்றம்

93 ஓட்டங்களை பெற்ற இலங்கை அணி

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்காலிக பயிற்சியாளர் இவரா?(photo)