காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி களிர்ச்சியாளர்கள் செங்கடலில் செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.
இதனால் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் ஒன்றிணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று ஏமனில் உள்ள அல் ஹுதைதா கடலில் சென்று கொண்டிருந்த கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியார்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மூன்று சிறிய படகு மூலம் கப்பலை வழிமறித்துள்ளனர். இரண்டு படகில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இருந்துள்ளனர்.
ஒரு படகில் மனிதார்கள் யாரும் இல்லை. ஆளில்லாத படகு கப்பல் மீது இரண்டு மூன்று முறை மோதியுள்ளது.
பின்னர் கப்பல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது அநத் ஆளில்லாத படகு விலகிச் சென்றுள்ளனர்.
பின்னர் சிறிது நேரம் கழித்து ஆட்கள் உள்ள இரண்டு படகில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த தாக்குதலில் இருந்து கப்பல் தப்பிவிட்டது.
கப்பலில் இருந்து மாலுமிகள் உள்பட யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை.
பிரிட்டன் கடல்சார் வர்த்தக நடவடிக்கை மையம் இந்த தகவலை தெரிவித்துள்ளது.
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இதுவரை 70-க்கும் மேற்பட்ட கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் நான்கு மாலுமிகள் உயிரிழந்துள்ளனர். ஒரு கப்பலை சிறைப்பிடித்தது. இரண்டு கப்பல்கள் மூழ்கடிக்கப்பட்டுள்ளன.